அடுத்த ஜென்மம்
வந்த நிமிடம் சாதிக்க மனமில்லை
மனம் மாறி நின்று மதமதப்பு.
நீயா நானா என்ற எக்களிப்பு.
சென்ற நிமிடங்களை வருந்தி என்ன பயன்.
விழியில் உனக்குக் கண்ணீர் மட்டுமே,
உன்னை காணத் துடித்த என்
கண்களில் கசிந்த ரெத்தம்
கதை பல உரைக்கும்.
விடிந்தபின் முடிந்ததை எண்ணி
என்ன பயன்.
புதிய நாளை, நாளை முதல்
கடந்து அனுபவிக்க விழை.
பூமிப் பந்து, கதிரவன், காற்று உள்ளவரை
ஜென்மம் பலவுண்டு மறவாதே.
தீக்குச்சி உண்டு, பஞ்சும் உண்டு,
பற்றவைக்க மருந்தின்றி மறைவு......