வைரமுத்து -ஆனந்தி

கரிசல் காட்டு மண்ணே - எங்களின்
கரு(வாச்சி)ப்பு காவியமே
தேனி மாவட்டத்தின் தேனே
வடுகப்பட்டி தந்த வாரிசே
அங்கம்(ம்மாள்) ஈன்றெடுத்த தங்கமே
பச்சையப்பன் கல்லூரியின் பரிசே......

வித்தக கவிஞரே
வார்த்தைளின் சுனாமியே
வைராக்கியத்தின் முகவரியே
முடியுடை வேந்தரே
கவிதைகளில் மூத்தவரே

இலக்கிய சுவைக்குள்
எல்லையை கண்டவரே
இலக்கண நடைக்குள்
உச்சம் தொட்டவரே
இமயத்தை வார்த்தைகளாலே
மண்டியிட வைத்தவரே

அள்ள அள்ள குறையா(கற்பனையின்)
அமுத சுரபியே
கற்பக விருட்சமே
விடியலின் சூரியனே
தேவர்களின் தெள் அமுதே
தெவிட்டாத முத்தமிழே
காதலுக்கும் காமத்துக்கும் மத்தியில்
மூன்றாம் உலக போரையே வர வைத்தையோ...

வைர முத்தே எந்நாட்டின் சொத்தே
உண்டா நீ தொட்டு செல்லா பாடுபொருள்....
இது வைரமா? முத்தா?
என மதி மயங்கி இட்டனரோ
பெயர் உமக்கு வைரமுத்துவென...

தமிழ் தாயே உன்னை தத்தெடுத்தாலோ?
உன்னை தமிழுக்கே விற்றிட்டாலோ?
ஈரேழு பிறவி கடந்தும்
நிற்கும் ஐயா நும் புகழ் - நீர்
எழுதா திரைபாடலில் எது(ஏது) சுவை....

வாழ்க நீர் பல்லாண்டு
வாழ்த்த வயதில்லை - வாழ்த்தி வணங்கி போற்றுகிறேன்....
தமிழன்னை துணைகொண்டு.....

எழுதியவர் : ஆனந்தி.ரா (29-Oct-15, 8:15 pm)
Tanglish : vairamutthu
பார்வை : 340

மேலே