புறப்படு தோழனே

புறப்படு தோழனே புறப்படு ! சில
புல்லியர் உன்றனை எள்ளி நகைப்பதா ? ( புறப்படு )
மறவனே ! மாமலை மேருவே ! ஏறுவே
மடையினை உடைத்துநீ பகைப்புலம் ஏறவே ! ( புறப்படு )

எத்தனை நாளுனைத் திட்டினர் ! சிலர்
எத்தனை நளுனைக் கொட்டினர் !
சொத்தைகள் வீழ்ந்திட இத்தரை மீதினில்
அத்தனை துயரையும் வெட்டி யழித்திட (புறப்படு )

தூங்கிக் கிடந்தது போதும் – வசை
தாங்கிக் கிடந்தது போதும் !
ஏங்கித் தவித்திடும் இழிநிலைப் போக்கிட
ஓங்கி நெறியினில் , ஒளியுடன் மேம்பட ( புறப்படு )

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (30-Oct-15, 6:11 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 185

மேலே