மனித சிந்தனைகள்
மனித சிந்தனைகள் மகத்தானவை,
ஒவ்வொன்றும் நமக்கே உரிதானவை
மடை திறந்த வெள்ளம் போல் வருபவை
சிறைப்படுத்தாமல் நீ அதனை சீர்தூக்கி வை !
காதலும் ஒரு சிந்தனையே
சாதலும் உன் சிந்தனையே
வெற்றியும் ஒரு சிந்தனையே
தோல்வியும் உன் சிந்தனையே
பக்தியும் ஒரு சிந்தனையே
அதன் சக்தியும் உன் சிந்தனையே
நித்தமும் வரும் பல சிந்தனையே
சில நேரங்களில்
நிகழ்வு பெறாமல் போவது வேதனையே
உடலுக்கு உயிர் உண்டு
உயிருக்கு உணர்வு உண்டு
உணர்வுகள் உருவம் கண்டு
வெளிச்சத்திற்கு வருவது நன்று
விதைகுள்ளே மரம் உண்டு
அதை விதைபதே நன்று
பட்டாம் பூச்சிபோல் சில சிந்தனைகள் உருமாறும்
பருவமங்கை போல் சில நேரம் அவை கர்வம் பெரும்
பகுத்தறிவோடு ஆராய்ந்தால் அத்தனையும் பொருள் தரும்