கடன் தீபாவளி
பெருமாலே
எம் புள்ள வெடி வெடிக்க
ஒரு வெடி கேட்குது.
என் வீட்டு பானையில
ஒரு காசு இருக்குது!
எம் புள்ள சிரிக்கதான்
நான் பத்தரத்த அடகுவைச்ச!
எம் புள்ள கேட்ட வெடிய
நான் வாங்கிவைச்சு வீடடைச்ச!
வருஷ ஒரு முறை தான்
எம்புள்ள சிரிப்பா!
மத்தபடி முறைபடிதான்
மாடு மேய்க்க போவா!
எம்புள்ள சிரிப்புக்கு தங்கமு
வைரமு வேண்டாய்யா
எங்க கூரவீடு போதும் அதுல
அவ மட்டு வாழனுய்யா!
தீபாவளி வந்தாக்க நாங்க
கடன் கேட்க போவோய்யா.
தீபாவளி போனாக்க அவங்க
கடன் கேட்க வருவாங்கய்யா!!
பெருமாலே பெருமாலே
எ வீட்டு பாத்திரத்த
இந்தவாட்டி காப்பாத்து.,
கடங்காரன் வந்தாக்க
வீடு வளைச்சு எடுத்துருவான்
இறங்கிவந்து காப்பாத்து!!
எம் போல புஞ்சாதிக்கு
குழந்தைங்க செலவுதான்!
அவங்கல சொல்லி ஒன்னுமில்ல
நம்ம மேல தப்புதான்!!
என்னைக்கு எம்புருஷன்
செத்தானோ அன்னைக்கே
கடன் மேல விழுந்துருச்சு!
எப்படித்தான் உழச்சாலும்
ஏழையை விட்டு கடன்
என்னைக்கு தான் மறஞ்சிச்சு??
ஊர்மக்க எல்லாரும்
சந்தோஷமா இருக்கட்டும்!
எம் மக போல இந்த நாளு
நிம்மதியா சிரிக்கட்டும்!!
கடங்கேக்க வருநாள
எந்தாலியத்தான் அடகு
வைக்கனும்!
எம்புள்ள ஒருகாலம் அத
பணக்காரியாய் வந்து
மீட்டனும்!!!