என் ஆசான்
என் ஆசான்
என் அம்மாவுக்கும் அப்பாவிற்கும் அடுத்த நிலையில்
யார் என்று என்னிடம் கேட்டால்
அவர் என் தமிழறிவு களஞ்சியத்தில் முதலிடத்தில்
அளித்தவர் என்று எந்நாளும் உரைப்பேன்
முடிவேயில்லாத அறிவினை எமக்கு ஊட்டுவதையே
குறிக்கோளாகக் கொண்டவரே!
என் அறிவுக் கண்களைத் திறந்து
என்னை நல்வழிபடுத்துவதிலும் செம்மைப்படுத்துவதிலும்
ஆழமான படிப்பினை தருபவர் என் ஆசானே!
என்னை ஆளாக்குவதில் பெரும் பங்கினைக்
கொண்டவரே!
என் ஆளுமைத் திறமைகளுக்கு அடித்தளம்
ஊன்றியவரே!
என் தமிழ் ஆசானே!
இன்று நான் பயில்வது நாளை வரும் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு
இறுகிய சன்னலும் இடித்தால்தான் திறக்கும்
இறுகிய சன்னலாய் இருக்கும் என் தமிழறிவை
இடிக்கப் பிறந்த என் ஆசானே!
சில உறவுகள் பல நம்மைச் சுற்றி பலமாய் இருந்தாலும்
உதவாத நிலையில்,
கல்வி ஒன்றே நம் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் களமாகும்
என்று உரைத்தவரே!
என் வாழ்வின் தமிழுற்று நீங்கள்
நித்தம் என்னுள் எழுச்சியை ஏற்படுத்தும்
செயலியும் நீங்களே!
ஓடமாயிருந்து என்னை கரையில் சேர்க்க
வந்தவரே!
ஓயமாட்டேன் தங்களின் அறிவு களஞ்சியத்தைப் பருகும் வரை
காலம் மாறி மாறிப் போனாலும் என்
தமிழ் ஆசானின் அருள் என்றும் மாறாது
கற்றத் தமிழ் மொழியின்
இனிமை மறந்திட மாட்டேன்
எனக்கு கற்றுத் தந்தவரான என் தமிழாசனையும்
ஒரு போதும் மறக்க மாட்டேன்.
உங்கள் ஆசையின்படி நானும்
திகழ்வேன் இந்நாட்டில் சிறந்த ஆசிரியராக...
படைப்பு: விஸ்வேணி த/பெ ஏகாம்பரம்
பினாங்கு ஆசிரியர் கழகம்
தமிழ் வகுப்பு /ஆண்டு 3 பருவம் 1