காலப் பதில்

கண்ணகி எரித்த தினத்தின்
மறு நாள் மதுரையாய்
மனம்

வெம்பி பிளந்து
வெகுவாய் சீழ்கோர்த்து

பம்மித் தலைகுனிந்து
பதவிசாய் வலி மறைத்து

போயின போயின
பல காலங்கள்

நீயோ வென்
முகத்தசை விகாரத்தினில்
வலியின்
முகவரி தேடித் தேடி

களைத்தனை
களைத்ததில்
கழித்தனை
காலம் பல நூறு

இன்று நான்
எரி நடுவே
இன்னொரு பிணம்

உன் கண்ணீர் வெள்ளம்
என்
காலடி சேரும்

ஆனால்
காலமல்லவோ
இதற்கோர்
பதில் கூறக் கூடும்

எழுதியவர் : (3-Nov-15, 2:34 pm)
Tanglish : kaalap pathil
பார்வை : 78

மேலே