திருவிழா
ஒட்டுமொத்த
ஊர் அழகிகளையும்
ஒருங்கினைக்கும்
பெருசுகளின் பெருந்திட்டம்
இளசுகளின்
ஏக்க கனவுகளை
நிவர்த்தி செய்யும்
மாமன் மகள்களின்
தாவணி தரிசனம்
அப்பாக்களின்
ஒரு வருட
உழைப்பின் மிச்சம்
மகிழ்ச்சியின் உச்சம்
என்றைக்கும் விட
இன்றைக்கு இன்னும்
அதிகமாக ஈர்க்கும்
அம்மாக்களின்
கோழிக்குழம்பு
அத்தை மகள்களின்
முத்தத்தால் முக்தி
அடையும் தினம்
தெய்வத்தை காட்டிலும்
மனிதர்களை மனிதர்களாக
காட்டும் மகத்தான விழா
இந்த திருவிழா