நளவெண்பாவிலிருந்து கொஞ்சம்… ட்விட்டுரை

இந்த ’நளவெண்பா’வில் ஒவ்வொரு பாட்டுக்குள்ளும் ஒரு அசரடிக்கும் வரியாவது இருந்துவிடுகிறது, உம்: ‘வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கி’ 1/2

காதல்வயப்பட்ட பொண்ணுக்கு ராத்திரி புழுக்கமா இருக்காம், ‘இரவே, நீ சூரியனை விழுங்கிட்டுப் பிறந்ததால் இப்படி வெக்கையா?’ங்கறா! 2/2

//நளவெண்பா// தமயந்தி உடம்பிலிருந்து வீசும் அனல் தாங்காமல், அவள் கூந்தல் பூக்களை மொய்த்துக்கொண்டிருந்த வண்டுகளின் சிறகுகள் தீய்ந்துடுதாம்!

//நளவெண்பா// தமயந்தி உடல் முழுக்க மன்மதன் அம்புகள் துளைத்து எரிக்க, அவள் நெருப்புக்கு நடுவே தவம் செய்வதுபோல் தெரிந்தாளாம்

//நளவெண்பா// ஊரே தூங்கிவிட்டது என்பதைச் சொல்வதற்கு, ‘யாழ் தாம் உள்ளுறை புகுத’ என்கிறார், யாழ்களைப் பொட்டிக்குள் வெச்சுப் பூட்டிடாங்களாம்

//நளவெண்பா// ‘இரவே, நீ தின்னும் இரையோ நான்?’ : தமயந்தி!

//நளவெண்பா// ஒரே புலம்பல்ஸா இருக்கு, ஜிவ்வுன்னு 50 பாட்டைத் தாண்டி நளன் : தமயந்தி முதலிரவுக்குப் போய்டுவோமா? :>

//நளதமயந்தி// முதலிரவுக் காட்சியின் முதல் பாடல், முதல் வரி ‘ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி’… என்னா வார்த்தைத் தேர்வுய்யா ;)

//நளவெண்பா// ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி, இருவர் எனும் தோற்றம் இன்றி, புனலுக்கே புனல் கலந்தார்ப்போல் வேலானும் காரிகையும் சேர்ந்தார்!

//நளவெண்பா// வல் ஓடும் : சூதாட உதவும் தாயக்கட்டைகள் வெட்கி ஓடும்படி… ம்ஹூம், சென்சார்ட், தேடிப் படிச்சுக்கோங்க ;)

எழுதியவர் : பகிர்வு: செல்வமணி (4-Nov-15, 6:54 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 66

மேலே