இதுதானே ஞாயம்
தங்கத்தை உரசிப் பார்த்தாலும்,
தாமரை பூ மலர் எடுத்து பார்த்தாலும்,
கண்ணிலே ஒரு துளி
கனவொன்றுமில்லை - ஆனால்
காணும் யாவும் தங்க மலர் மேனி மட்டும் தெரிவதென்ன ஞாயம்???
கண்டு வந்த பேரழகை சொல்ல ஒரு வார்த்தை இல்லை,
காணுகின்ற வார்த்தைகளும் உன்
கால்தடத்துக்கு ஈடில்லை,
பொன்னான பொன்மணியே,
உனை இங்கு பார்த்ததாலே புதுவிடியல் வந்ததென்று புலம்புவதென்ன ஞாயம்??
மின்னி மின்னி மின்னுகின்ற
மின்னலுக்கும் தெரியவில்லை,
முகம் காட்டும் நிலவும்
மறைந்ததெனோ புரியவில்லை,
உன் உறக்கத்தில் சிணுகின்ற
கால்கொலுசால் தானோ என்றே
உறக்கம் கலைந்து விடிவதென்ன ஞாயம்!??
மலர் எடுத்து செய்ததுவா?இல்லை
மலராலே செய்ததுவா?என்றே
எண்ணி உனை தொட்டுப் பார்த்தே சுகபோதை தினம் கொள்ளும் உன்
ஆடையாக மாறாமல் மனிதாய்
பிறந்ததென்ன ஞாயம் !!??
எட்டி எட்டி வந்தாலும், நீ
எட்டடியில் நின்றாலும் , நான்
வெக்கி தலை குனிந்து உனை
தொட போன முயற்சியில் தோற்றுப்போனதில் என் கனவு
கலைந்ததென்ன ஞாயம்??
தத்தி வந்த எழில் மானை,
மனதில் ஊற்றி வைத்த மதுத்தேனை,
தினம் கட்டில் மீது கிடத்தி
நான் கண்டு வந்த சுகமெல்லாம்
மீண்டும் மனைவியாக தருவாள்
என்றால் அத்தவத்திற்க்கே
அவள் காலடியில் கிடப்பேன்
இது தானே ஞாயம்!!!♥