பயணிப்போம்

பயணிப்போம்

பயணிப்போம்...!

நாம் -
நெஞ்சம் நிறைந்த
நம்பிக்கை களோடு
நித்தம் நித்தம்
பயணிப்போம்...!

நமது -
வாழ்வின்
விளிம்புகளைத் தாண்டி...
வியாபித்திட வேண்டி
பயணிப்போம்...!

நம்
பாதச் சுவடுகள்
இமாலயத்தின்...
மகுடமாய் விளங்கிட
பயணிப்போம்...!

நாம் -
எதிலும்
எதிர்பார்ப்போடு
அல்ல...
எதிர்நோக்கோடு...
பயணிப்போம்...!

நமது -
காலடியின் நிழலாய்
காற்றை கைது செய்ய...
பயணிப்போம்...!

நம் -
பண்பாடுகளை
சூடிய -
பகுத்தறிவோடு...
பயணிப்போம்...!

நாம் -
இரவுகளை இரசிக்கும்
விடியலின் விழிகளாய்
பயணிப்போம்...!

நமது -
பழமைகளை
உயர்த்தியேத்தும்
புதுமையின் கரங்களாய்...
பயணிப்போம்...!

நம் -
கானம் பாடி
வானம்பாடிகளாய்
ஞானம் தேடி...
பயணிப்போம்...!

எழுதியவர் : இராக. உதயசூரியன். (5-Nov-15, 10:15 pm)
Tanglish : payanippom
பார்வை : 71

மேலே