குமிழ்கள்……

ஒவ்வொரு குமிழிலும்
ஒட்டிப்பறக்கிறது
குழந்தையின் முகம்..

சிதறித்தெறிக்கும்
ஓர் குமிழின்
சில துளிகளில்
கறைகிறது வானவில் வர்ணத்தோடே
சுற்றியுள்ள உலகம்

மேலே பறக்கும்
ஒரு குமிழில்
வானத்தை அடக்கிவிட முடிகிறது

எப்போதும் குழந்தையாகிவிடுகிறோம்
நாம்
குழ்ந்தைகள் குமிழ்விடுவதை ரசிக்கவும்
அதை தாவிப்பிடிக்கவும்
ஒருமுறையாவது
குமிழ்விட்டுப்பார்க்கவும்
தாயாரகிவிடுகிறோம் …

குமிழ் போலவே
வாழ்க்கை வண்ணங்களாலும்
உறவு, நட்புக்கூட்டங்களாலும்
சந்தோஷங்களாலும்
நிரம்பியிருக்கிறது…
மேலும்….,
எப்போதும் உடையத்தயாராய்……..

எழுதியவர் : RISHISETHU (7-Nov-15, 11:48 am)
சேர்த்தது : ரிஷி சேது
பார்வை : 202

மேலே