எல்லோரா 4

கைலாசநாதர் கோவில். உலகிலேயே மேலிருந்து கீழாக செதுக்கப்பட்ட ஒரே கோவில். ஒரு மணி நேரத்திற்கு ஐந்து டன் வீதம், நாளொன்றுக்கு பன்னிரண்டு மணி நேரம், பதினெட்டு வருடங்கள் பாறைகளை வெட்டி, குடைந்து எடுத்து நிர்மாணிக்கப்பட்ட ஆலயம். அவுரங்கசேப் ஆணையிட்டதன் பேரில் எட்டாயிரம் பேர் தொடர்ந்து மூன்று வருடங்கள் முயன்றும் பத்து சதவிகிதத்துக்கு குறைவான சிற்பங்களையே சேதப்படுத்த முடிந்தது என்றால் இதன் மகிமையை என்னவென்று கூறுவது?

இதையெல்லாம் யோசித்துப் பார்த்துத்தான் இந்த கைலாயம் மனிதனால் உருவாக்கப்பட சாத்தியமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார்கள். அப்படியென்றால் யார் குடைந்தெடுத்தது இந்த அற்புதத்தை? வேற்று கிரக வாசிகள்? என்றாலும், ஏன் சிவன் கோவில்? அப்படியானால், இது தேவ சிற்பி விஸ்வகர்மாவின் படைப்போ? தேவர்கள் தங்கள் தலைவனுக்கு அர்ப்பணித்த ஆலயமோ? எண்ணற்ற கேள்விகள். பதில்கள் தான் இல்லை. ஆனால், சிவனையும், விஷ்ணுவையும் (தசாவதார சிற்பங்களை போட்டேனா?) நினைத்து மனசு நிறைகிறது நிஜம்.

குகைகள் 17லிருந்து 29வரையிலான சிற்பங்கள் இந்த பதிவில் இடம் பெறுகின்றன.

இதுவரை இந்த போஸ்ட் 1613 லைக்குகளும், 2770 ஷேர்களும் போயிருக்கிறது. இதில், தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பெருமையும் இல்லை. இது நமது சரித்திர, கலை, கலாச்சார, பாரம்பர்ய, ஆன்மீக அடித்தளத்தின் மீது எழுந்து வானுயர நிற்கும் பிரம்மாண்டம். இக்கீர்த்தியே உங்களை இதனிடம் இழுத்திருக்கிறது. சிறு விண்ணப்பம். இதை பார்க்கும், படிக்கும் அனைவரும் இதற்கு முன் போஸ்ட் செய்த அனைத்து எல்லோரா & அஜந்தா பதிவுகளை பார்க்கவும் & படிக்கவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எழுதியவர் : செல்வமணி (9-Nov-15, 8:15 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 216

சிறந்த கட்டுரைகள்

மேலே