தீபாவளி தாக்கம்

தூக்கம் கொஞ்சம் சுருக்கி,
ஏக்கம் சிறிது அடக்கி,
ஆக்கம் எண்ணி சுவைத்து
தேக்கம் போக வேண்டியொரு
தீபாவளியை ஏற்கும் மனதில்
ஆகா ஓகோ என்று அலைபாயும்
ஆனந்தம் லயிக்காமல் போவதென்பது
ஆழ்மனதின் அபிலாஷையே..

எந்த தீபாவளி இனித்தது என்று
மனவோட்டம் எல்லாம் வெள்ளோட்டம்
பணத்தை எண்ணி எண்ணி செலவழித்த
பாங்கு கொஞ்சம் மாறிவந்தாலும்
சந்தோஷம் இங்கே அவ்வளவாயில்லையே
என்றோர் ஏக்கம் தான் எல்லோரின் பெருமூச்சாய்...

மழையும் தன் பங்கினுக்கு சந்தோசத்தில்
கொஞ்சம் சங்கடத்தை தூவி விட்டு சென்றிடும்
தீபாவளி பண்டிகை இங்கே பட்சணமாய்
லட்சணமாய் கழிகிறது, கடமையென...

எழுதியவர் : செல்வமணி (10-Nov-15, 8:02 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 44

மேலே