காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

21. பேதி எடுக்கத் தேவையில்லை
------------------
பண்டிட் தோதாராம் சனாட்ய, காந்தி அடிகளுடன் சபர்மதி ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். அவருடைய மனைவி திருமதி கங்கா பஹனும் அவரோடு தங்கியிருந்தார். ஒருநாள் அவருக்கு உடம்பு சௌகரியமில்லாமல் போய்விட்டது. வழக்கம்போல் காந்தியடிகள் அவரை கவனித்து சிகிச்சை செய்து வந்தார்.

அன்று திங்கட்கிழமை. காந்திஜி மௌன விரதம் மேற்கொண்டிருந்தார். கங்கா பஹனைப் பார்க்கச் சென்றார். ஏதோ அவசர வேலை ஏற்பட்டு விட்டதால் உடனே திரும்ப வேண்டியதாயிற்று. மருந்துகள் பற்றியோ, என்ன சாப்பிட வேண்டும் என்றோ அறிவிக்கவும் நேரமில்லை…

இரவு சுமார் இரண்டு மணிக்கு அவர் தூக்கம் கலைந்தது. காங்கா பஹனுக்குத்தாம் இன்று மருந்து அறிக்கைகொடுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. உடனே அவர் சிறு துண்டுக் காகித்தத்தில் பென்சிலால் எழுதினார்- பேதி எடுக்கத்தேவையில்லை. இன்றும் பால் கொடுக்க விரும்புகிறேன். ஆரஞ்சு, திராஷை ரசத்தைக் குடிக்கவும். எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ, அவ்வளவு குடிக்கலாம். தொட்டி ஸ்நானம் செய்து பனிக்கட்டியால் உடம்பை நன்றாகத் தேய்த்துகொள்வாய் சோடாவும் உப்புத் தண்ணீரும் சாப்பிடலாம். இன்றும் வயிற்றைச் சுற்றி மண்பற்றை இறுக்கி கட்டிக்கொள். இப்போடே கொய்னா மாத்திரைகள் நான்கு, எலுமிச்சைச் சாறுடன் சோடாவுடனும் சேர்த்துச் சாப்பிடவும். நேரம் இரவு இரண்டு அடித்து ஐந்து நிமிடம்.’

அந்தக் காகித்த்தை ஆசிரமத்திலுள்ள ஒரு சகோதரியிடம் கொடுத்து உடனே தோதாராம் சனாட்ய அவர்களுக்கு கொடுத்தனுப்பினார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (12-Nov-15, 6:33 pm)
பார்வை : 424

சிறந்த கட்டுரைகள்

புதிய படைப்புகள்

மேலே