கடவுள் படைப்பில் எப்பொருளும் வீணுக்கல்ல

41. கடவுள் படைப்பில் எப்பொருளும் வீணுக்கல்ல


நவகாளி யாத்திரையின்போது காந்தியடிகள் ஸ்ரீராம்பூரில் தங்கியிருந்தார். அன்று இரவு இரண்டு மணிக்கு அவர் விழித்துக்கொண்டார். மனுவையும் எழுப்பினார். அன்றுதான் மனுவுக்காக சீட்டித்துணியில் பைஜாமாவும் சட்டையும் தைத்து வந்திருந்தன. காந்தியடிகள் அவளிடம் ‘நீ சீட்டி அல்லது வேறு வகையான கதர் வாங்குவது சம்மந்தமாக யாரிடமாவது சொல்லி இருந்தாயா?’ எனக்கேட்டார்.

மனு இந்தத் துணியை அவர் கொண்டுவரவில்லை. தாங்கள் பிர்லா ஆட்களிடம் சொல்லியிருந்தீர்கள். அவர்கள் தான் கொண்டுவந்தார்கள்’ எனக் கூறினாள்.

அப்படியென்றால் குறைந்த விலையா இருக்கும்? ஆனால் மனதில் இப்படிப்பட்ட துணிகள் உடுத்தினால்தான் அழகாகத்தோன்றும் என்ற எண்ணம் எழுந்திருந்தால் அதை களைந்தெரியவேண்டும். மனிதன் சுவைக்காக புளிப்பு, இனிப்பு காரம் முதலியவைகளை உணவில் சேர்த்துகொள்கிறான். ஆனால் இந்த உடம்பு தொண்டு செய்வதற்கென்றே பயன்படுத்தவேண்டும். தொண்டு செய்வதற்கு நாம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்ன எண்ணத்தை உண்டாக்கினால் நல்லது. இதே விதி உடையணிவதற்கும் பொருந்தும். ஆடைகள் மானத்தைக் காப்பாற்றுவதற்கும் உஷ்ணம், குளிர் முதலியவைகளிலிருந்து காப்பாற்றக் கொள்வதற்கும் தான் இருக்கின்றன. போலி நாகரிகத்தை வெளிக்காட்ட அல்ல. இன்று எல்லாத்துறைகளிலும் போலி நாகரீகம் தான் பரவியிருக்கிறது. நமதுபிற்கால சந்ததிகள் இதனால் கெட்டு அழிந்து போவார்களே என்ற துக்கம்தான் எனக்கு ஏற்படுகிறுது.” என்றார் காந்தியடிகள்.

இதன் பின் இப்படிப்பட்ட துணிகள் உடுத்துவதினால் என்ன தீமைகள் விளைகின்றன என்பதை விள்க்கிகொண்டே குழந்தைகள் விடுதிக்கு வந்தார். ‘குழந்தைகள் எப்படித் தூய்மையாக இருக்கவேண்டுமென அன்று கூறியிருந்தேன். இன்று மேலும் அதன் மீது ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். கழந்தைகள் எவ்வளவுக்கெவ்வளவு தூய்மையாகவும் சாதாரணமாகவும் தென்படுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் அழகாக இருக்கிறார்கள். தலைமயிர் தலையைக் காப்பாற்றவே இருக்கிறது. கடவுள் கொடுத்திருப்பவையாவும் நன் முறையில் பயன்படுத்துவதற்கே. அவனால் படைக்கப்பட்ட எந்தப் பொருளும் வீணாவதில்லை’ என்றார் காந்தியடிகள்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (12-Nov-15, 6:57 pm)
பார்வை : 160

மேலே