இவரை ரக்ஷிப்பது உங்கள் கடமை

40. இவரை ரக்ஷிப்பது உங்கள் கடமை


ஒத்துழையாமை இயக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில் காந்தியடிகள் சென்னை வந்தார். 1919 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம். சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி வீட்டில் தங்கியிருந்தார்.

ஒருநாள் தமிழ் நாட்டின் புகழ்பெற்ற தேசியக்கவிஞர் பாரதி அவரைச் சந்திக்க வந்தார். எந்தவிதமான ஆசாரமும் இல்லாமல் அவர் அடிகளைப் பார்த்து ”மிஸ்டர்’ காந்தி! இன்று மாலை கடற்கரையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம். நான் அதில் பேசுகிறேன். தாங்கள் இதற்குத் தலைமை தாங்க ஒப்புக்கொள்ளவேண்டும்” என்றார்.

காந்தியடிகள் ‘நாளை இந்தக் கூட்டம் நடைபெற்றால் நான் வரமுடியும்’ என பதிலளித்தார்.

‘கூட்டம் இன்றுதான் ஏற்பாடாகியிருக்கிறது. தங்களின் ஒத்துழையாம் இயக்கம் வெற்றி பெறுக’ என வாழ்த்திவிட்டு பாரதியார் சென்று விட்டார். அறிமுகம் முதலியன இல்லாமலேயே வந்த இவர் யார் எனக் காந்தியடிகள் கேட்டார்.

”இவர் தான் தமிழ் நாட்டின் தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்” என ராஜாஜி அவர்கள் பதிலளித்தார்.

”அப்படியென்றால் இவரை ரக்ஷிப்பது உங்கள் போன்றவர்களுக்கு கடமை” என்றார் காந்தியடிகள்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (12-Nov-15, 6:56 pm)
பார்வை : 119

சிறந்த கட்டுரைகள்

மேலே