நினைவலைகள்

புகைப்படப் புன்னகையிலும்
தொட்டு துலங்கி
சுவடுபதித்த இடங்களிலும்
உன்னைக் குறித்த
நினைவலைகள் இல்லை!

குஞ்சுகளை புறம் தள்ளி
சிறகு கேடயம் ஏந்தி
வல்லூரை எதிர் கொள்ளும்
தாய்க்கோழியிலும்;

கன்றுகளிடத்தில்
தெரு நாய்கள் செய்யும்
சில்மிசம் கண்டு, கொம்பு தாழ்த்தி
சீறிப்பாயும் தாய் பசுவிலும்,

ஒட்டிய வயிற்றோடு
குட்டிகளுக்கு பாலூட்டி
ஆளாக்கும் தெரு நாயிடத்தும்,

முறைவைத்து குஞ்சுகளுக்கு
பகிர்ந்தூட்டும்
குருவிகளின் கரிசனத்திலும்
காண்கிறோன்.

தாயே! என்னை அலைக் கழிக்கும்
உன்னைக் குறித்த
என் நினைவலைகளை!

~கவுதமன்~

எழுதியவர் : கவுதமன் (13-Nov-15, 12:12 pm)
Tanglish : ninaivalaigal
பார்வை : 114

மேலே