விதி
விதி
****************************
காசுபணம் சேர்த்தாலும் காடுவயல்
சேர்ந்தாலும் போகுமிடம் ஒன்றுதானே
ஓசைபட வாழ்ந்தாலும் மௌனமது
காத்தாலும் மாய்ந்ததும் மறுபிறப்பே
ஆசையது உற்றாலும் அதுஅற்றுப்
போனாலும் பயனதுவும் மனதிற்கே
பூசையிட்டுத் தொழுதாலும் அதுஒதுக்கி
வைத்தாலும் இட்டவிதி இட்டவிதியே !!!