ஒத்த ரூபாய்க் காசு
ஒத்த ரூபாய்க் காசு💰
"""""""""""""""""""""""""""""""
காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தை...
தன் தந்தையிடம்...
அப்பா நான் ஸ்கூலுக்கு கிளபிட்டேன்...
என்று கத்த...
அப்பா...
தன் சட்டைப் பையிலிருந்து...
ஒரு ரூபாய் காச எடுத்து...
தன் குழந்தையிடம் கொடுத்து...
காச பத்திரமா தொலைச்சிடாம,
வாங்கி சாப்பிடனும் சரியா...!!!
என்றார்...
இடைவேளை நேரம் பள்ளியில்...
அந்தக் காசுக்கு,
பள்ளிக்கு எதுத்த கடையில்...
ஏதோ தின்பண்டம் வாங்கித்தின்றது,
அந்த குழந்தை...
இப்பொழுது குழந்தைக்கு நிம்மதி...
அப்பாவின் நம்பிக்கையை காப்பாற்றி...
காசை தொலைக்காமல் செலவழிச்சதுக்கு...!!!
சிறிது நேரத்தில்...
வயது முதிர்ந்த முதியவர்...
கடைக்காரனிடம்...
"ஐயா தர்மம போடுங்க..."
என்று கை நீட்ட...!!
அந்த ஒத்த ரூபாய் காச...
பிச்சையாய் போட்டான்,
கடைக்காரன்...!!!
ஏற்கனவே...
ஒன்பது ரூபாய் வைத்திருந்த,
முதியவர் கையில்...
இப்பொழுது பத்து ரூபாய்...!!!!
கையேந்தி சம்பாதித்த பணத்தை...
கையேந்தி பவனில் செலவழித்து,
உணவருந்துகிறார்...!!
கையேந்தி பவனிலிருந்து...
கைவண்டியிழுக்கும் கூலித்தொழிலாளியிடம்
செல்கிறது...
அந்த ஒத்த ரூபாய் காசு...!!!
மறுநாள் ஆயுதபூஜை...
இதுவரைக்கும்
பட்ட கஷ்டமெல்லாம் தீரனும்னும்...
கைவண்டி...
இயந்திர வண்டியாய் மாறனும்னும்...
சம்பாதிச்ச காசில்..
ஒரு திருஷ்ட்டி பூசனிக்காய் வாங்கி...
அதுல அந்த,
ஒத்த ரூபாய் காசப் போட்டு...
மூனு சுத்து சுத்தி...
நடுரோட்டுல போட்டு...
உடச்சிட்டான்...!!!
அந்த வழியாக...
தன் தந்தையுடன் வந்த
ஒரு குழந்தை...
பூசனிக்காயை பார்த்து...
"ஐ... ஒரு ரூபாய்...!!!"
என்று எடுக்கப்போக...
ஏய்...
அதத் தொடாத...
யார் கழிச்சிப்போட்டதோ...
என்று குழந்தையை,
இழுத்துச்செல்வதை பார்த்த,
ஒத்த ரூபாய்க்கு...
மனம் உடைந்துவிட்டது போலிருக்கிறது...
அதான்...
யார் கண்ணிலும் பாடாமல்...
ஒருசில நாட்களுக்குள்...
மண்ணுக்குள் புதைந்து விட்டது...
இங்குதான்...!
அந்த குழந்தையின் பணம்...!!
தெரிந்தே தொலைக்கப்படுகிறது...!!!"
இவண்
✒க.முரளி (spark MRL K)