கவுதமன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவுதமன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 14-Apr-1953 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 21 |
பச்சைத் தமிழ் மறவன்;
பற்றற்ற பெருந் தலைவன்
விதிர்விதிர்த்து விரைந்து வந்த
விடுதலை காட்டாற்றில்
எதிர்நீச்சல் போட்டு
ஏறிவந்த தமிழ் ஏடு.
வரலாறு படைத்து
வாழ்ந்து சென்ற வாரிவடிவம்!
தாயகத்து விலங் கொடிக்கும்
தணியாத பெருவருப்பால்
கால் விலங்கும் கைவிலங்கும்
கலங்காமல் ஏற்ற மகன்
பெண்டு பிள்ளை வாழும் என்னும்
பெருவிருப்பு ஒன்றைதான்
கொண்டிங்கு அரசியலில்
குதிப்பவர்கள் மத்தியிலே;
அரசியலுக்காய் உறவை
அடியோடு ஒதுக்கியவன்.
ஏற்று நின்ற பதவிக்கெல்லாம்
ஏற்றம் தந்த மகான்
தூற்றலுக்கு அஞ்சி
துவண்டு விழா போர்மறவன்
நாற்றச் சாய்க்கடையாய்
நய்ந்திழிந்த அரசியலில்
தோற்றப்பொலி வோடு
துலங்கிநின்ற க
ஆர்ப்பரித்து, ஆர்ப்பரித்து
ஆவேசம் கொள்கிறது அலை.
நிலத்திற்கும்
கடலுக்கும இடையே
நிகழ்கிறது கைகலப்பு.
'கேக்'கை வெட்டுவது போல்
வெட்டிச் சாய்க்கிறது
நிலத்தை.
அதிகம் இருப்பவனுக்குத் தானே
ஆசையும் அதிகம்.
கரை வேட்டிகளை
மடித்துக் கட்டிக் கொண்டு
மல்லுக்கு நிற்கிறது அலை.
நிலப்பகுதி
மூன்றில் ஒருபங்கு
என்ற இறுமார்பில்.....
வோர்களை வெளிக்கொணர்ந்து
மரத்தை மானபங்கப்
படுத்தியிருக்கிறது அலை.
கரையோர வீடுகளில் எல்லாம்
விரிசல்.
காற்று மௌன சாட்சியாக
வேடிக்கைப் பார்க்கிறது.
எல்லை தாவாவிற்கு
யார் மத்தியஸ்தம் செய்வது?
பாறைகளிடத்தில்
அலையின் பாட்சா பலிக்கவில்லை.
நில
ஓணானை யாரும் விரும்புவதில்லை
பச்சோந்திகளை
வரும்பும் அளவிற்குக் கூட...
சில பிராணிகளுக்கு இருக்கும்
திருட்டுப் பட்டம் கூட ஓணானுக்கு இல்லை.
கள்ளிக் கரம்புகளில்
வேலியில் ஓணான்
விளையாடிக் கொண்டிருக்கும்.
யாருக்கும் எந்த தொந்தரவும்
செய்வதாக பொரிதாக
புகாரும் இல்லை.
ஓணானைப் பற்றி
எந்த ஆய்வுக் கூடமும்
ஆய்வுசெய்ததாகத் தொரியவில்லை.
இப்படி
ஓரேயடியாக
வெறுக்கப்படும் அளவிற்கு
அது நடந்து கொள்வதாகவும்
தொரியவில்லை.
பெரும்பாலும்
ஊருக்கு வெளியேதான்
சகவாசத்தை
வைத்துக் கொள்ளும்.
ஓணானை பற்றி
எனக்குத் தொரிந்த வரை
யவருமே கவிதை எழுதியதில்லை.
பகட்டாக இல்லை
என்பது தான்
ஒரே க
காலா காலத்திற்கென்று
எதுவுமே இல்லை!
அனைத்துமே
கலக்கெடுவோடு கூடியதே.
மலர்களை மரங்கள்
எத்தனை நாட்களுக்கு
மடியில் வைத்துக்காப்பது?
கண் அயரும் போது
கை நழுவி விடும்
குழந்தையின் பொம்மைகள்.
மறைக்கப்பட்ட சில
காலக்கொடுக்கள் உண்டு
அவைகளுக்காகத் தான்
நாம் அனுதாப்படுகிறோம்.
தேர்வுகால கால நீடிப்பு
கருணை அடிப்படையிலானது.
செலுத்த வேண்டிய நேரமும்
செலுத்த வேண்டிய தொகையும்
பெரும்பாலும் நமது
சக்திக்கு அப்பாற் பட்டதாகவே
தான் இருந்து விடுகிறது.
வாழ்க்கை நிருணயித்த
காலக் கொடுவில் நாம்
அபராதம் செலுத்த கிறவர்களாகவே
ஆகிவிடுகிறோம்!
~கவுதமன்~
அது ஒரு சிறிய ஸ்டேசன்
பழைய பயண நினைவுகளை
அசைபோட்டபடி
ஒதுக்குப் புறமாய்
ஓரம் கட்டப்பட்டடு நிற்கிறது
ஒற்றை ரயில்ப்பெட்டி ஒன்று,
இடைக்கால ஏற்பாட்டிற்கு ஏங்கியபடி!
இனி அதனால்
ஒரு அடிகூட
எடுத்து வைக்க முடியாது.
யாத்திரையை தவறவிட்ட
யாத்திரிகன் போல
நின்று கொண்டிருக்கிறது பெட்டி.
சக்கர விளிம்புகள்
துருப் பிடித்திருக்கின்றன.
மொசு மொசுக்கைக் கொடிகள்
பெட்டியின் மோற் கூரை வரை
ஏறி விளையாடிக் கொண்டிருக்கின்றன.
நெடுநாட்கள் நிற்பதால்
பெட்டி நிறமாறி இருக்கிறது.
இப்போது அது
சமுக விரோதிகளின்
தங்கும் விடுதி.
அங்கும் இங்குமாக
அன்றாடம்
நூற்றுக் கணக்கான ரயில்கள்
அந்தமா
காலத்தின் வாயிலில்
கட்டுக் கடங்கா கூட்டம்,
வாழ்வில் வஞ்சிக்கபட்டோரின்
முறையீடுகள்
கேட்கப்படுகின்றன
என்னும் வதந்தியால்....
விசாரித்ததில்
உண்மை என்பது
உறுதி செய்யப்பட்டது....
நியாயம் கேட்க்கும்
முறையீடுகள்,
அநியாயம் பற்றிய
ஆற்றாமைகள்,
மறுபாரிசீலனை கோரும்
மனுக்கள்.
எங்கும் அழுகையோடும்
ஆற்றாமையோடும்
அலைமோதும் மக்கள்....
கதவு திறக்கப்பட்டது
காலம் கம்பீரமாக
வெளியே வந்தது.
நிசப்தம் சிறிது நேரம்
நிலவியது.
கனிவோடு பேசியது காலம்
உங்களது முறையீடுகளைக் கேட்டு
நானும் திக்குமுக்காடிப் போனேன்
கனத்த இதயத்தோடுதான்
உங்கள் கண்முன்னே
நிற்கிறேன்.
கடவுளின் பரிசீலனைக்காக
நறுமணத்தோடு
நாளைத் துவக்க
காத்திருந்த மலர்களுக்கு,
பெருத்த ஏமாற்றம்!
நறுமணம் இதுவரை
காற்றில் கலக்கவில்லை.
மழை நிற்குமொன
காத்திருந்து, காத்திருந்து
கண்கள் பூத்துக்கொண்டிருந்தனர்
மக்கள்.
தும்பிகளுக்கும்
தேன் சிட்டுகளுக்கும் இன்று
பட்டினிதான்.
நந்த வனங்களுக்கு இன்று
அறிவிக்கப்படாத விடுமுறை
மழையில் நனைத்து மலர்பறிக்க
எவருமே, தயாராக இல்லை.
பூக்குவளைகளின்
வருகைக்காக
கையை பிசைந்தபடி
காத்திருந்தனர்
'பூ'பண்டாரங்கள்.
தோத்திர கீதங்களைக் கேட்க,
பள்ளி கொண்டபடி
படுத்திருந்தார் கடவுள்;
காதுகளை தீட்டியபடி.
பாமாலை முடிந்தும்
பூமாலை வரவில்லை!
மாலை வந்தபின்பு
ஜனனிக்கும் துடிப்பில்
மெல்லிய அலகுகளால்
முட்டையை உடைக்க முயலும்
குஞ்சுகள்.
தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்
முயற்ச்சியில், துவண்டு, துவண்டு விழ
எழும் கன்றுகள்.
தேன் திருடர்களால்
சிதிலமடைந்த வீட்டை
நம்பிக்கை யோடு
கட்டியெழுப்பும் ஈக்கள்.
வெப்பம் சுட்டடெரித்த
தரையில்
ஒரு மழைக்குப் பிறகு
துளிர் விடும் புற்கள்.
தறைமட்டமாக்கப்பட்ட வீட்டை
கட்டியெழுப்பும் கறையான்.
காயங்கள் கண்மூட
ரணங்கள் ஆகிபோய்விடுகின்றன,
வெட்டுக்காயங்களை
தானே ஆற்றி கொள்கின்றன
மரங்கள்.
இப்படி
இழப்புகளுக்குப் பிறகும்
இருக்கிறது வாழ்க்கை.
~கவுதமன்~
மருத்துவமனையில்
சாவோடான
அவனது போராட்டம்
இறுதியாக ஈடேறியது.
மரண தருவாயில்
அந்த பொது மருத்துவ மனையில்
சோர்ந்தவார்கள்
புண்ணிய வான்களாகத்தான்
இருக்க வேண்டும்.
இதுவரையில்
பிணமாக வாழ்ந்தவன்
இப்போது
பிணமாகக் கிடக்கிறான்.
பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்
முகவரி
போலி என்பது
நிருபணமாகியது.
காலக்கெடு
நிறைவடைந்த நிலையில்
சடலத்தை
ஏற்பவராக எவரும் இல்லை.
பிணத்தை வைத்து
கப்பம் வசூலிக்க
காத்திருந்தோரிடையே
பெருத்த ஏமாற்றம்.
பதன அறை நோக்கி
சடலம் நகார்ந்தது.
ஏ.சி. யின் ஸபரிசம்
முதன்முறையாக
இவனுக்கு வாய்த்தது
சாவுக்குப் பிந்தி.
அனாதை பிணத்திற்கு
ஆய்வ