மோதல்கள்

ஆர்ப்பரித்து, ஆர்ப்பரித்து
ஆவேசம் கொள்கிறது அலை.

நிலத்திற்கும்
கடலுக்கும இடையே
நிகழ்கிறது கைகலப்பு.

'கேக்'கை வெட்டுவது போல்
வெட்டிச் சாய்க்கிறது
நிலத்தை.

அதிகம் இருப்பவனுக்குத் தானே
ஆசையும் அதிகம்.

கரை வேட்டிகளை
மடித்துக் கட்டிக் கொண்டு
மல்லுக்கு நிற்கிறது அலை.

நிலப்பகுதி
மூன்றில் ஒருபங்கு
என்ற இறுமார்பில்.....

வோர்களை வெளிக்கொணர்ந்து
மரத்தை மானபங்கப்
படுத்தியிருக்கிறது அலை.

கரையோர வீடுகளில் எல்லாம்
விரிசல்.

காற்று மௌன சாட்சியாக
வேடிக்கைப் பார்க்கிறது.

எல்லை தாவாவிற்கு
யார் மத்தியஸ்தம் செய்வது?

பாறைகளிடத்தில்
அலையின் பாட்சா பலிக்கவில்லை.

நிலம் சொன்னது:
இழிச்சவாயன்
என்னிடம் தானே
இந்த வீராப்பு.

முடிந்தால்
பாறைகளிடத்தில்
மோதிப்பார்!

~கவுதமன்~

எழுதியவர் : கவுதமன் (2-Mar-16, 12:11 pm)
சேர்த்தது : கவுதமன்
Tanglish : mothalkal
பார்வை : 100

மேலே