இந்தியாவின் வழிகாட்டி

பச்சைத் தமிழ் மறவன்;
பற்றற்ற பெருந் தலைவன்
விதிர்விதிர்த்து விரைந்து வந்த
விடுதலை காட்டாற்றில்
எதிர்நீச்சல் போட்டு
ஏறிவந்த தமிழ் ஏடு.
வரலாறு படைத்து
வாழ்ந்து சென்ற வாரிவடிவம்!
தாயகத்து விலங் கொடிக்கும்
தணியாத பெருவருப்பால்
கால் விலங்கும் கைவிலங்கும்
கலங்காமல் ஏற்ற மகன்
பெண்டு பிள்ளை வாழும் என்னும்
பெருவிருப்பு ஒன்றைதான்
கொண்டிங்கு அரசியலில்
குதிப்பவர்கள் மத்தியிலே;
அரசியலுக்காய் உறவை
அடியோடு ஒதுக்கியவன்.
ஏற்று நின்ற பதவிக்கெல்லாம்
ஏற்றம் தந்த மகான்
தூற்றலுக்கு அஞ்சி
துவண்டு விழா போர்மறவன்
நாற்றச் சாய்க்கடையாய்
நய்ந்திழிந்த அரசியலில்
தோற்றப்பொலி வோடு
துலங்கிநின்ற கமலப்பூ!
ஏற்றிவைத்த விளக்கணைக்க*
ஏவலிட்டு, பின் தனியே
காற்றில் கலந்துவிட்ட
கற்பூர தீப ஒளி!
*(விளக்கை அணைத்துவிட்டுப்போ
காமராஜ் பேசிய கடைசிப்போச்சு)

~கவுதமன்~

எழுதியவர் : கவுதமன் (25-Mar-16, 11:59 am)
பார்வை : 70

மேலே