மீண்டும் மீண்டும்
ஜனனிக்கும் துடிப்பில்
மெல்லிய அலகுகளால்
முட்டையை உடைக்க முயலும்
குஞ்சுகள்.
தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்
முயற்ச்சியில், துவண்டு, துவண்டு விழ
எழும் கன்றுகள்.
தேன் திருடர்களால்
சிதிலமடைந்த வீட்டை
நம்பிக்கை யோடு
கட்டியெழுப்பும் ஈக்கள்.
வெப்பம் சுட்டடெரித்த
தரையில்
ஒரு மழைக்குப் பிறகு
துளிர் விடும் புற்கள்.
தறைமட்டமாக்கப்பட்ட வீட்டை
கட்டியெழுப்பும் கறையான்.
காயங்கள் கண்மூட
ரணங்கள் ஆகிபோய்விடுகின்றன,
வெட்டுக்காயங்களை
தானே ஆற்றி கொள்கின்றன
மரங்கள்.
இப்படி
இழப்புகளுக்குப் பிறகும்
இருக்கிறது வாழ்க்கை.
~கவுதமன்~