வின் ஞானம்

காவின் ஞானம் சம நிலைகாட்டும்
---கதவின் ஞானம் கா வல்கூட்டும்
கோவின் ஞானம் குலந் தனைக்காக்கும்
---குருவின் ஞானம் குவ லயங்காக்கும்
மாவின் ஞானம் ருசி தரக்கூடும்
---மதுவின் ஞானம் குடி யழித்தாடும்
மடுவின் ஞானம் நீ ரினைத்தேக்கும்
---மருவின் ஞானம் நறு மணங்கூட்டும்

இரவின் ஞானம் நிழ லைக்கூட்டும்
---நிலவின் ஞானம் கன வைக்கூட்டும்
தருவின் ஞானம் காற் றைத்தூய்க்கும்
--- தனுவின் ஞானம் வில் லினைஎய்யும்
பூவின் ஞானம் தேன் தரக்கூடும்
---புழுவின் ஞானம் மண் வளங்கூட்டும்
ஆவின் ஞானம் பால் தரும்நேசி
---அடஉன் ஞானம் யா தரும்யோசி

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (17-Nov-15, 11:14 am)
பார்வை : 56

மேலே