சிதறல்கள்

உதிராத இலையின்
நுனிகளில் உதிர்கிறது
காணும் விழி
-----------------------------

திரும்பிப் பார்ப்பதில்தான்
திரும்ப திரும்ப
திரும்புகிறது திரும்புதல்
------------------------------------

கிழிசல்
புடவைக்குள்
தாவணி இருக்கிறது
------------------------------------

அடித்து எழுதிய
வரிக்கு
அடுத்த வரி அழகு
-----------------------------------

கடைசியாக
பார்த்தவன்
கடைசி வரை அழுகிறான்

கவிஜி

எழுதியவர் : கவிஜி (17-Nov-15, 12:59 pm)
Tanglish : sitharalkal
பார்வை : 127

மேலே