அஞ்சலி

மருத்துவமனையில்
சாவோடான
அவனது போராட்டம்
இறுதியாக ஈடேறியது.

மரண தருவாயில்
அந்த பொது மருத்துவ மனையில்
சோர்ந்தவார்கள்
புண்ணிய வான்களாகத்தான்
இருக்க வேண்டும்.

இதுவரையில்
பிணமாக வாழ்ந்தவன்
இப்போது
பிணமாகக் கிடக்கிறான்.

பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்
முகவரி
போலி என்பது
நிருபணமாகியது.

காலக்கெடு
நிறைவடைந்த நிலையில்
சடலத்தை
ஏற்பவராக எவரும் இல்லை.

பிணத்தை வைத்து
கப்பம் வசூலிக்க
காத்திருந்தோரிடையே
பெருத்த ஏமாற்றம்.

பதன அறை நோக்கி
சடலம் நகார்ந்தது.

ஏ.சி. யின் ஸபரிசம்
முதன்முறையாக
இவனுக்கு வாய்த்தது
சாவுக்குப் பிந்தி.

அனாதை பிணத்திற்கு
ஆய்வுக்கூடம் தானே புகலிடம்!

அவனுக்கு,
வாழ்விலும் சோதனை
போய் செர்ந்த பின்பும் சோதனை.

நெடுஞ்சாலையைக் கடந்து
அமரர் ஊதியில்
போய்க் கொண்டிருக்கிறது
அவனது உடல்
மருத்துவக்கல்லூரி நோக்கி.

அங்கே
ஒப்பாரி இல்லை
ஊர்வலம் இல்லை
குமுறி அழும்
கூட்டம் இல்லை!

~கவுதமன்~

எழுதியவர் : கவுதமன் (27-Oct-15, 8:53 am)
Tanglish : anjali
பார்வை : 85

மேலே