உதாரணம் சொல்ல ஓர் உயிர்
ஓணானை யாரும் விரும்புவதில்லை
பச்சோந்திகளை
வரும்பும் அளவிற்குக் கூட...
சில பிராணிகளுக்கு இருக்கும்
திருட்டுப் பட்டம் கூட ஓணானுக்கு இல்லை.
கள்ளிக் கரம்புகளில்
வேலியில் ஓணான்
விளையாடிக் கொண்டிருக்கும்.
யாருக்கும் எந்த தொந்தரவும்
செய்வதாக பொரிதாக
புகாரும் இல்லை.
ஓணானைப் பற்றி
எந்த ஆய்வுக் கூடமும்
ஆய்வுசெய்ததாகத் தொரியவில்லை.
இப்படி
ஓரேயடியாக
வெறுக்கப்படும் அளவிற்கு
அது நடந்து கொள்வதாகவும்
தொரியவில்லை.
பெரும்பாலும்
ஊருக்கு வெளியேதான்
சகவாசத்தை
வைத்துக் கொள்ளும்.
ஓணானை பற்றி
எனக்குத் தொரிந்த வரை
யவருமே கவிதை எழுதியதில்லை.
பகட்டாக இல்லை
என்பது தான்
ஒரே குறை பாடு
மற்ற படி
உயிர் எழுத்துகளுக்கு
உதாரணம் சொல்ல மட்டும்
ஓணான் தேவைப்படுகிறது!
~கவுதமன்~