மீண்டும் மீண்டும் - போட்டிக் கவிதை
நிறம்
--------
அந்த மாயக் குளத்தில்
முங்கி எழும் ஒவ்வொரு
முறையும் மாறியதென் நிறம்
ஒவ்வொரு முறையும் எங்கோ
ஆரவாரம் ஆர்பாட்டம் ஒப்பிட்டு
தனி ஆவர்த்தனம்
உள்ளே இருட்டில் ஊமையாய்
உடுத்திக் களைந்த தெல்லாம்
உள் வாங்க வில்லை
தனி மனிதன் வெளிச்சத்தில்
கண்கூச இங்கே நிறம் பிரிக்கச்
சொல்லித் தந்தது யாரு?
------- முரளி