மீண்டும் மீண்டும்

இரக்கமற்ற இந்த உலகில்

மீண்டும் மீண்டும்
பிறக்க ஆசை-நீயே என் கனவனாக
இருப்பாய் என்றால்..

மீண்டும் மீண்டும்
தோற்றுப்போக ஆசை
தோற்றுபோவது உன்னிடமாக இருந்தால்...

மீண்டும் மீண்டும்
சுமையை சுமக்க ஆசை
தருவது நீயாக இருந்தால்...

மீண்டும் மீண்டும்
அழுதிட ஆசை-என்
கண்ணீரை துடைப்பது
உன் கையாக இருந்தால்...

மொத்தத்தில்...
மீண்டும் மீண்டும்
வாழ்ந்திட ஆசை-வாழ்வது
உன்னுடன் என்றால்...

என்றும் காதலுடன்,
R.தமிழ்கனி.

எழுதியவர் : தமிழ்கனி (15-Nov-15, 6:00 pm)
Tanglish : meendum meendum
பார்வை : 122

மேலே