ஒளி கிடைத்தது
ஒளி கிடைத்தது
******************
கண்பார்வை இன்றி அல்லல் பட்டுக் கொண்டிருந்தவன் ரகு
அவன் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் ஒரு நாளில் நன்மை கிடைக்கும் என்று அவன் ஒரு போதும் நினைத்திருக்கவில்லை.அவனுக்கு அந்தளவு வசதியும் இல்லை.
திடீரென அவ்ன் நண்பன் சேரன் அவனை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று ரகுவுக்கு கண் ஆபரேஷன் செய்து கண்பார்வையைப் பெறமுடியும் என அவனது உயிர் நண்பனான சேரன் கூறினான் .
சேரன் தனக்கு இருந்த ஒரே வீட்டையும் விற்றுவிட்டு ரகுவையும் அழைத்துக்கொண்டு கொண்டு இந்தியாவுக்குச் சென்றான் .ரகு அகமகிழ்ந்தான்
ஆபரேஷன் தயாரானது ரகு தியேட்டரைக்குள் கொண்டு செல்லப்பட்டான்.
அதன் பிறகு ரகுவுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது .
கண்ணில்லாத ரகுவுக்கு கண்பொருத்தப்பட்டு பார்வை கிடைத்தது .
ரகு மகிழ்ந்து சேரனைப் போற்றினான்
அப்போது தான் தெரிந்தது சேரன் தன் இரு கண்களில் ஒன்றை ரகுவுக்குக் கொடுத்து
தனது சகோதர்ர் கூட செய்யாத்தைத் தன் ஆருயிர் நண்பன் செய்திருக்கிறான்.எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறான் என்பதை நினைக்கும் போது ரகுவுக்மகு அழுகை வந்தது .
ரகு சேரனைக் கட்டியணைத்துக் கொண்டு ஆனந்தம் கண்ணீர் விட்டான் .
(நனைந்தது)