உயிர்க் காதல் அக்னியில் சங்கமம்

உயிர்க் காதல் அக்னியில் சங்கமம்!
சுந்தரன் கண்களும்
சுந்தரி கண்களும் சந்தித்துக் கொண்டன
விளைந்தது ஓர்
உன்னத உயிர்க் காதல்
இதயங்கள் இணையத் துடித்தன
சந்தித்தித்துக் கொண்டனர் அடிக்கடி
பரவியது ஊர் வம்பு
காட்டுத்தீ போல்
எட்டியது பெற்றோர்களையும்
கிளம்பியது பெருமெதிர்ப்பு
அவளுக்கோ வீட்டுக்காவல்
அவனுக்கோ பெருமெதிர்ப்பு
போனால் காலடித்து முறிப்பாம்
இரு இதயங்களும் துடித்தன
சோகத்தின் உச்சக்கட்டம்
என்ன செய்வதென திகைத்தன
கண் இல்லாக் காதல்
தடைகளை மீறிச் சந்தித்தது
இருவரும் போவோமா
ஒருமித்துக் கூறினர்
செய்தி வந்தது
எங்களூர்ச் சுடலையில்
சுந்தரனும் சுந்தரியும்
கட்டியணைத்தபடியாம்
உயிர்கள் இல்லை உடல்கள் மட்டுமாம்
ஊர் திரண்டது சுடலை நிறைந்தது
அழாத கண்களிலை
பெற்றோர் உற்றோர் ஒப்பாரி வைத்தனர்
மறுநாள் அருகருகே
ஒரு உன்னத உயிர்க் காதல்
அக்னியில் சங்கமம்!