மீண்டும் மீண்டும் - ஹயாக்ஸ் கவிதை போட்டி

மாண்டோர்கள் மீண்டதில்லை
மானிடனே
மனதில் தோன்றும்
மாண்புகள் மீள்கிறது

அரியணை சுகத்திற்கு
அரிவாள் வெட்டு
ஆண்மை சுகத்திற்கு
பாலியல் மொட்டு
பணத்தை ஆளும்
ஜாதிக் கட்டு - இதை
படித்துக் காட்டுகிறது
பட்டணத்து சிட்டு
என பாவங்கள்
மீண்டும் நீண்டு கொண்டே இருக்கிறது

நதியுதவிக்கு நிதியுதவி
நானும் நீயும் செத்தால்
பணவுதவி - இதை
எண்ணிப் பார்க்கிறது
வானிலை மறுவி
எழுதிக் காட்டுகிறது
தேர்தல் துருவி
என கர்மங்கள்
மீண்டு நீண்டு கொண்டே போகிறது

மதுவே எங்கள்
மாநிலத்தின் வித்து
என உரக்க கத்துது பார்
குடும்ப குத்துவிளக்கு
குடிக்காவிட்டால்
குடும்பம் கெத்து இதுவே
மனைவிமார்களின் சொத்து
என அறிந்தும்
அழிவை தேடும் அதர்மங்கள்
மீண்டும் நீண்டு கொண்டே செல்கிறது

மீண்டும் மீண்டும்
வானம்
பொழிவதை மறக்கவில்லை
பூமி
விளைவதை நிறுத்தவில்லை
சாமி
வணங்குவதை மாற்றவில்லை
காற்று
வீசுவதை அளக்கவில்லை
ஆனால்

காமத்திலும் ஏமத்திலும்
சாமத்திலும்
அடுத்தவனை கொன்று
படைத்தவனையே மிஞ்சும் அளவிற்கு
பிறந்து பிறந்து இறக்கும்
மனிதன் மட்டும்
மாறிவிட்டான் ...!


- ஹிஷாலி - சென்னை.

எழுதியவர் : ஹிஷாலீ (16-Nov-15, 12:03 pm)
பார்வை : 43

மேலே