மகிழ்ச்சியின் முயற்சி

உலகில் உயிர்கள் சமமென்று
உரைத்தவன் யாரடா?
உள்ளமற்றவன் உழைப்பவனை
உதைப்பவன் தானடா!

அவமானம் கண்ட போதெல்லாம்
நீ அமைதி கொண்டாயடா?
நீ அமைதி கொண்ட நேரத்தை
அவன் ஆட்சி செய்தானடா!

அவமானங்களும் அடமானங்களும்
ஏழைக்கு புதிதல்ல
தேடல்களும் தீர்க்கங்களும்
தோல்விக்கு வழியல்ல

தேயிலை தோட்டத்து அட்டைக்கு
நீ உரமாக தெரியலாம்
உதிரம் உறிஞ்சிய அட்டைக்கு
ஓர்நாள் உன்னுயரம் புரியலாம்

உள்ளமற்ற உள்ளவர்காள்!
உங்களுகொன்று உரைகின்றேன்
சொல்லிலாவது இருக்கட்டுமென்று
இப்படி உங்களை அழைகின்றேன்...

இனி
முதலாளித்துவமும் மார்க்சியமும்
கைகோர்க்கட்டும்
முடிந்தவரை தம்மக்களின்
மகிழ்ச்சிக்காய் முயற்சிக்கட்டும்...
ஏழையின் சிரிப்பு
எட்டுத் திக்கும் கேக்கட்டும்
இறைவனுக்கு பதிலாய்
உங்கள் முகம் தெரியட்டும்...

ஏழைகள் என்றும் எஜமானரின்
ஏணிப்படிகளே!
ஏற்றிவிட்ட ஏணியையும்
தூக்கி விடுங்களேன்....

எழுதியவர் : சீதளாதேவி வீரமணி (16-Nov-15, 5:10 pm)
பார்வை : 67

மேலே