காகிதக் கப்பல்
என்றோ பெய்யும் மழையில்...
அதிரடியாய் உதிக்கும் காகிதக் கப்பலும்
அடைமழை கண்டு வெளிய வர மறுக்கிறது...
நாங்கெல்லாம் அந்த காலத்துல..
என சொல்லிக் கொண்டிருந்த தாத்தாவும்
மழை பார்த்து வாயை மூடிக் கிடக்கிறார்...
இதோ இப்போ இல்லை அப்போ நிற்பேனென
வேடிக்கை காட்டிய படியே உற்சாகமாய்
கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது மழை...
மழைக்காக ஏங்கித் தவித்த பயிர்களெல்லாம்
தண்ணீரின் தாக்கம் தாங்க முடியாமல்
தற்கொலை செய்து கொண்டன வயற்காட்டில்...
நீரே பார்த்திராத சிறு சிறு அணைகளும்
வரும் நீரை தாங்க முடியாமல் உடைந்து
எல்லா கிராமங்களையும் மூழ்கிக் கொண்டுள்ளது...
இதுவரை தூங்கிக்கொண்டிருந்த அரசாங்கமும் அதிகாரிகளும்
உதவித்தொகை அளிப்பதிலும், அறிக்கை அளிப்பதிலும்
அதிரடியாய் மழைக்கு இணையாக பத்திரிக்கைகளில் இடம்பெறுகின்றனர்....
இத்தனையும் பார்த்து பார்த்து பழகிய மழை
எனக்கென்னவென்று இப்போதும் சோவென நிற்காமல்
பெய்து கொண்டு தான் உள்ளது ஊரெங்கும்...