மழை என் வாழ்க்கை

மழை
ஒரு தாய்
மண்னில் விழும்
விதைகளுக்கு
உயிர் கொடுப்பதால்.....
மழை
ஒரு தந்தை
உலகவாழ்வை
கட்டமைப்பதால்....
மழை
ஒரு குழந்தை
பிறக்கும்போதே
சட சட வென
சப்தமிடுவதால் ....
மழை
ஒரு தோழன்
சோர்ந்திருக்கும் பொழுது
ஆறுதல் தருவதால்.....
மழை
ஒரு காதலி
தழுவும்பொழுது
தேகத்தைவிட மனதிற்கு
சுகம் தருவதால் ....
மொத்தத்தில்
மழை
என் வாழ்க்கை.

எழுதியவர் : சுரேஷ் குமார் (16-Nov-15, 9:54 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : mazhai en vaazhkkai
பார்வை : 166

மேலே