வெளிநாட்டு வாப்பா

தொடர் நாடகம் பார்த்து மகிழும் சிலருக்கு மத்தியில்
தொடர் கதை பேசும் தொலைபேசிக்கு
நான் பிள்ளையா...

புத்திக்கு படவில்லை
புத்திக்குப்பட வயதுமில்லை..

வீட்டு மூலையில் புழுதி படிந்து கிடக்கும் தொலைபேசிக்கு
வரும் வாரம் இருமுறை உயிர்..

தொலைபேசிக்குத்தான் பெயர் வாப்பா என்றெண்ணிய
காலம் கடக்க வந்தார் ஒரு நாள் வாசலில்...

கையில் இரண்டு பெட்டி
வந்த காரில் நான்கு பெட்டி...

வந்தவர் வாப்பா என்றதும்
எட்டிப்பார்த்தேன் படிந்த புழுதி மாறவில்லை
வீட்டுமூலை நிசப்தம் நிறைந்திருக்க உள்ளம் ஏற்க்கவில்லை

தந்தை தொடர்பு தூரத்தினால் பிரிந்திருக்க
தொலைபேசி தூதுவன் மற்றும் தான் என்று
ஆண்டு இரண்டு கடந்து புரிந்துகொண்டேன்..

காலமும் பாசமும் நகர்ந்து செல்ல
குட்டிப்பையன் உள்ளம் உணர்ந்தது நேசம் வளர்ந்தது...

***பர்ஷான்***

எழுதியவர் : பர்ஷான் (17-Nov-15, 6:14 pm)
சேர்த்தது : பர்ஷான்
பார்வை : 67

மேலே