உடன்குடி

உடன்குடி - நான் அறிந்த செய்திகள் இதோ

நெருக்கமான வேல மரத்தின் நடுவே
மக்கள் தங்கள் குடியிருப்பை
அமைத்து கொண்டதே பெயர் காரணமாம் இந்த - உடன்குடி

நாக்கு செவக்க வெத்தளையும்
இனிப்பு சேர்க்க பனை கருப்பட்டியும்
தயாரிப்பதில் உலக புகழ் பெற்றது இந்த - உடன்குடி

2001-இன் படி சக்தியை (பெண்) விட சிவன் (ஆண்)
அதிகம் வாழும் ஊர் இந்த - உடன்குடி

மரம் ஏறும் மக்கள் பலர் இருந்தாலும்
உலகளவில் படித்தவர் எண்ணிக்கை அதிகம்
கொண்ட ஊர் இந்த - உடன்குடி (2001 - in படி 59.5%)

உடல் முழுக்க வண்ணமிட்டு, கரி பூசி
தன் வேடம் மறைத்து மாறு வேடம் கொண்டு
10 நாட்கள் தசரா திருவிழா கொண்டாடும் ஊர் இந்த - உடன்குடி

வேதம் சொல்லும் புத்தகம் வேறு என்றாலும்
அது கூறும் கருத்து ஒன்று தான் என்பது போல
எல்லா மத மக்களும் சம பங்கில் ஒற்றுமையாக
வாழும் ஊர் இந்த - உடன்குடி

உலகம் இது இருண்டு விடாமல் இருக்க
மின்சார உற்பத்தி செய்யும் ஆலைகள்
கொண்ட ஊர் இந்த - உடன்குடி

எதோ என் சிறு அறிவுக்கு எட்டிய செய்திகளை
நண்பர்களே உங்களிடமும் பகிர்ந்ததில் மகிழ்ச்சி....

எழுதியவர் : பிரதீப் ரா (18-Nov-15, 7:39 am)
பார்வை : 83

மேலே