என் காதல் - உதயா

ஒரே பார்வையில்
என் மூளையின் திரவம்
வற்றிப் போக
காதலும் கவிதையும்
சுனையாக ஊற்றெடுக்கிறது ...!

என் உயிர் அணுக்களின்
மொத்த உருவமாய்
என் உணர்வலைகளின்
ஆதியாய் அந்தியாய்
அவளாகிப் போகிறாள் ...!

இதயத்திற்கு பக்கத்தில்
கனவு தேசத்தை
கோர்த்துவைத்து
கணந்தோரம் நினைவுகளில்
காட்சியாய் வாசம் செய்கிறாள் ..!

அவளை அவ்வப்போது களவாடி
கற்பனை உலகிற்கு சிறையெடுத்தும்
கற்பனை தோற்று வியக்கிறது
கற்பனையே காணாக் கற்பனையாய்
அவளாகிப் போவதால் ...!

அவள் பயணித்த பாதையில்
பதிந்த பாத சுவடுகளையே
உரமாக்கி கொண்டதில்
என் காதல் விருட்சம்
விழுது ஊன்றி வளர்கிறது ...!

காற்றில் கலைந்து கிடந்த
அவள் முடிகளைக் கொண்டே
கவிதை செய்கையில்
என் டைட்டானிக் கப்பல்
இன்னும் மூழ்காமல்
பயணிக்கிறது ...!

விரல்களின் தீண்டலோடு
இதழ் அமுதினை பருகி
மேனிதனை சிலிர்ப்பு தேசத்தில்
புகுத்தில் கொள்ளவே
எங்கள் பிறப்பு பலன்கள்
காத்து கிடக்கிறது ...!

உயிரினை உருக்கி
பூக்களாய் வார்த்தெடுத்து
இரவுகளை நூலாக்கி தைக்கையில்
கண்ணீரின் சுவைதனையே
மணமாக்கி கொள்கிறது
எம் காதல் மாலை...!

எழுதியவர் : உதயா (18-Nov-15, 1:41 pm)
பார்வை : 227

மேலே