ஏனிங்கு வந்தாயோ

சில்லென காற்று சிலிர்பூட்ட
மெல்லிய மண்மணம் மனம் தீண்ட
முந்தய இருப்பிடம் நீ காண
முனைப்புடன் வந்தாயோ மழை மகளே ...
சிந்திய சிறுதுளி சிதறாமல்
மண்ணிடம் சேர்ந்தது அக்காலம்
என்னின மாந்தர்கள் குடியேறி
உன்னிடம் மறைந்தது இக்காலம்

எழுதியவர் : செந்தமிழரசு (18-Nov-15, 4:57 pm)
பார்வை : 67

மேலே