நீர்வளம் காப்போம்

இந்நிலையில் விவசாயிக்கு சொந்தமான கிணற்று நீருக்கும் கூட வரி விதிக்க வகை செய்யும் தேசிய நீர்க் கொள்கையை தற்போதைய மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது.

கடந்த ஜனவரி 31 -ல் வெளியிடப்பட்ட வரைவு தேசிய நீர்க் கொள்கை குறித்த மக்களின் கருத்துக்களை பிப். 29 க்குள் அரசுக்கு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அது குறித்த எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை.

மிக விரைவில், மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுவிட்டதாகக் கூறி, இது சட்டமாக்கப்படலாம்.

தேசிய நீர்க் கொள்கை சட்டமாக்கப்படுமானால், நாட்டிலுள்ள அனைத்து நீர் வளங்களும் அரசு வசமாகும், அதன் பிறகு குடிநீர்த் தேவை தவிர பிற அனைத்து நீர்த் தேவைகளுக்கும் அளவுமானி பொருத்தி நீர்வரி விதிக்கப்படலாம்.

இந்த வரியை வசூலிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படலாம். உப்புக்கு விதித்த வரியை நீக்கக் கோரி மகாத்மா காந்தி போராட்டம் நடத்திய அதே மண்ணில், இப்போது தண்ணீருக்கும் வரி விதிக்கப்படப் போகிறது!

ஒருபுறம் நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைத்து, வறட்சியைப் போக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றமும் கூட கவலை தெரிவித்துள்ளது.

ஆனால் அதுகுறித்து கவனம் கொடுக்காத மத்திய அரசு, நாட்டிலுள்ள அனைத்து நீர் வளத்தையும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சட்டத்துக்கு சூழல் இயக்கங்களும் சுதேசி சிந்தனையுள்ள இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தச் சட்டம் நிறைவேறாமல் தடுக்க வேண்டியது நமது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அவசியமானதாகும்.

தாகம் தீர்க்கும் தண்ணீர் இப்போதே குளிர்பானம் என்ற பெயரில் காசாகிக் கொண்டிருக்கிறது.

சுத்தமான குடிநீரும் வர்த்தகப்பொருளாகிவிட்டது.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத அரசுகளின் கையாலாகாத் தன்மையே தண்ணீர் விலைபொருளாகக் காரணம். ஒரு லிட்டர் பாலுக்கு விவசாயிக்குக் கிடைப்பது 20 ரூபாய் தான். ஆனால், ஒரு லிட்டர் தண்ணீரை 15 ரூபாய்க்கு விற்கும் விந்தை நிலையையும் நாம் காண்கிறோம்.

இந்த விபரீதமான ஏற்றத் தாழ்வுகளும், விந்தையான நிலைப்பாடுகளும் மாற்றப்பட வேண்டும்.

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (18-Nov-15, 8:08 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 1114

சிறந்த கட்டுரைகள்

மேலே