பன்னாட்டு கம்பெனி தொழில் - இந்திய நிஜக்கதை - அரசியலுக்கு அஸ்திவாரம்

ஹூன்டாய் நிறுவனம் தமிழகத்தில் சென்னையில் கார் உற்பத்தி தொழிற்சாலை தொடங்க தமிழக அரசு பல்வேறு வரிச் சலுகை, 24 மணி நேர மின்சாரம் என வழங்கியது.

அதில் ஒன்று முதல் ஐந்து வருடங்களுக்கு வரி விலக்கு.

அந்த நிறுவனமும் வந்து தொழில் தொடங்கியது.
ஐந்து வருடங்களில் இங்கு கார் உற்பத்தி செய்து வரிவிலக்கில் வெளிநாடுகளுக்கு பல லட்சம் கார் களை ஏற்றுமதி செய்து வந்தது.

ஐந்து வருடம் கழித்து வரிகட்ட வேண்டிய காலமும் வந்தது.
அதாவது குறைந்த பட்ச வரியே ஒரு வருடத்திற்கு 2500கோடிகள்.
அப்போது அவர்கள் செய்தது என்ன தெரியுமா?

ஹூன்டாய் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி முதல்வரை சந்தித்தார்.
சந்தித்து சென்னை காவல்துறையை நவீன மயமாக்க 100 ஹூன்டாய் அஸ்ஸன்ட் கார்களை இலவசமாக வழங்குவதாக தெரிவித்தார்.
அதுவரை நமது காவல்துறையினர் டாட்டா சுமோவில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

உடனே அரசும் தலைமையும் ஒப்புக்கொண்டனர்.

நமது காவல்துறையினரோ, ஏதோ அமெரிக்க காவல்துறை சேசிங் செய்ய செல்வார்களே அதுபோல குதிபோட்டுக்கொண்டனர்.

நமது முதல்வர் வரிசையாக 100கார்களை கொடியசைத்து துவக்கியது தலைப்பு செய்திகளில் வந்தது.

ஆனால் அதற்கு நாம் கொடுத்த விலை எவ்வளவு தெரியுமா?
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் நமது முதல்வர் வரி விலக்கு அறிவித்து விட்டார்.

அதாவது 2,500*5=12500கோடிகள்.

நண்பர்களே அன்றைய தினத்தில் அந்த காரின் சந்தை விலை ஆறரை லட்சம்.
அப்போ உற்பத்தி விலை மூன்று லட்சமாக இருந்திருக்கலாம்.
ஆக,300000*100=30000000

அதாவது மூன்று கோடிகள்.

இதைப்பற்றி அப்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் குய்யோ முறையோ என கூப்பாடு போட்டது பெட்டிச்செய்தியாகத்தான் வந்தது.
எத்தனை பேர் இந்த செய்தியை படித்தீர்கள். யாருக்காவது இதுபற்றி தெரியுமா?
மூன்று கோடியை இலவசமாக கொடுத்து பனிரெண்டு ஆயிரம் கோடிகள் கொள்ளை போனது யாரறிவார்.

இதே சதித்திட்டம் தான் நோக்கியாவிலும்.
வரிச்சலுகைகளை அனுபவித்து விட்டு வரிகட்டும் காலம் வந்ததும் ஓடிவிட்டனர்.

இதேபோன்று தாமிரபரணி ஆற்றில் இருந்து நமது தண்ணீரை………
ஒரு லட்சம் லிட்டர் தண்ணீரை வெறும் ஐநூற்று அறுபது ரூபாய்க்கு நமது அரசு ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறது.

அந்த நிறுவனம் அந்த நீரை சுத்திகரிப்பு செய்கிறேன் பேர்வழி என்று கூறி நமக்கு ஒரு லிட்டர் இருபது ரூபாய்க்கு விற்கிறது. இதுபோல பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை சொல்லி மாளாது.

நண்பர்களே, சிந்தித்து பாருங்கள்.

நாம் நம் மக்களுக்கு தேவையான மின்சாரத்தை ஒரு யூனிட் பனிரெண்டு முதல் பதினைந்து ரூபாய் வரை அதிக விலை கொடுத்து வாங்கி மூன்று முதல் ஆறரை ரூபாய் வரை மக்களுக்கு கொடுக்கிறது அரசு.
இப்படி இருக்கும்போதே பல்வேறு இடங்களில் மின்வெட்டு உள்ளது. இந்நிலையில் இந்நிறுவனங்களுக்கு 24மணிநேரம் மின்சாரம் வழங்க வேண்டும்.
அதாவது இன்னும் மின்தேவை அதிகமாகும்.அப்போது இன்னும் அதிக விலை கொடுத்து வாங்கி இவர்களுக்கு மானிய விலையில் 24மணிநேரமும் மின்சாரம் வழங்க வேண்டும்.
நினைத்து பாருங்கள்.

இதற்கு பதில் நமது ஊர் தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து அவர்களது குறைகளை களைந்து நலிவுற்ற தொழில்களை மேம்படுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இதெல்லாம் பார்க்கும் போது வடிவேலு வின் 23ம் புலிகேசியில் வரும் காட்சி…….
அந்த பன்னாட்டு கம்பெனி தொழில் தொடங்க நமக்கு எவ்வளவு கமிஷன் தருவார்கள் என்று கேட்பார். அந்த காட்சி தான் கண்ணீரோடு நினைவுக்கு வருகிறது.

வாழ்க பாரதம். வளர்க மக்களின் முட்டாள்தனம்..

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (19-Nov-15, 8:55 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 252

மேலே