சோதனை - சிஎம்ஜேசு

அந்த இரவு பொழுதுக்கு மணி 10 இருக்கும் சென்னைக் கீழ்கட்டளையில் இருந்து ஒ .எம்.ஆர் நோக்கி
வந்துகொண்டு இருந்தேன் .அதற்க்கு முன்னதாக என் இசைத் தோழர் மகனின் திருமணம் நடைபெற்ற
கந்தன் சாவடி திருமண மண்டபத்தில் இசைக் கச்சேரி முடித்து என் மற்றும் ஒரு தோழரை அறையில்
ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டு வந்துக்கொண்டிருந்தேன் ,அந்நேரம் ஒ.எம் .ஆர் சோதனை சாவடியில்

போலீசார் வாகனங்களை தணிக்கைச் செய்துக் கொண்டிருந்தனர் ,உடனே நான் என் தலை கவசத்தைக்
கழட்டி விட்டு என் முகத்தைக் மறைக்காமல் நல்ல நிலையில் என் இருசக்கர வாகனத்தில் மெதுவாக
முன்னோக்கினேன் ,உடனே ஒரு போலீஸ் மனிதர் என்னை வழிமறித்தார் ,வாகனத்தை உடன் நிறுத்தி
உம்ம், சொல்லுங்க சார் என்றேன் .

உடனே அவர் : சார் எங்கிருந்து வரீங்க என்றார்
நான் ; நண்பரை அறையில் விட்டு விட்டு திருமணத்தில் கலந்துக்கொண்ட
மற்றொரு தோழரை அழைத்து வரச் செல்கின்றேன் சார் என்றேன்
உடனே அவர் : ஊதுங்க சார் என்று அவர் இடது கையை என் வாயருகே நீட்டினார்
நானும் ஊதினேன் ,மீண்டும் ஊதுங்கள் என்றார் பின்னர் நானும் மீண்டும் ஊதினேன்
உடனே அவர் ;எப்படி ஊத வேண்டுமென்று காண்பித்தார் .அதுபோல் நானும் ஊதினேன்

உடனடியாக அவர் போங்க சார் என்றார்
என்னால் அந்த அவமான வலியைத் தாங்க முடியவில்லை
ஒரு நிமிடம் மனம் கனத்து வேதனை அதிகரித்தது .சட்டுன்னு நான் அவரிடம்
ரொம்ப அவமானமாக இருக்கு எனக்கு நீங்க என்ன ஊதச் சொன்னது என்றேன்

உடனே அவர் அருகில் இருந்த மற்றொரு போலீஸ் அதிகாரியை அழைத்து
இவர் என்னமோ சொல்கிறார் என்று என்னைக் காட்டி பேசினார்
அந்த அதிகாரி பேசிகொண்டிருக்கும் போது என் வண்டியை சுச்ச்ஹாப் செய்தார்

ஏன் இப்படி செய்றீங்க சார் என்றேன்
உடனே அந்த அதிகாரி உங்கள நாங்க செக்கப் செய்யாம எப்படி இவர் நல்லவர்
குடிக்காம வண்டிய ஊட்டுகிறார் என்று சொல்லமுடியும் என்றார். சொல்லிக்கொண்டே
சிகப்பா இருக்கரவ பொய் சொல்லமாட்டான் என்ற சினிமா வசனம் போல இருக்கே சார் என்றார் .

பின்னர் அவர்களிடம் விடைபெற்றேன் .இன்னும் அந்த வேதனையில் இருந்து விடை பெறாமல்
உங்களிடம் பகிர்கிறேன் .ஒருவர் குடித்திருக்கிறார் என்பதால் ஊரையே குடிகாரராக சந்தேகம்
அடைவது அரசுக்கு அவபெயரையே பெற்றுத் தரும்

குடிக்காத ஒரு மனிதர் குடிகாரனாக சோதனைக்கு உள்ளாகிறார்
ஊத தெரியாத ஒரு மனிதர்க்கு குடித்தால் எப்படி ஊதவேண்டும் என்ற நிலைப்பாட்டை
கற்றுக் கொடுக்கிறது வேதனைச் செயல்

ஆழ்ந்த அனுபவமும் சென்னை வாழ் மகனுமான எனக்கு இறைவன் இப்படியெல்லாம்
உலகத்தில் அவமானம் அடைந்து வாழ வேண்டுமா என்றெல்லாம் கூட தோன்றுகிறது

சட்டங்களில் இல்லை அவமானம் அதை நிறைவேற்றும் போது தான் ஏற்படுகிறது அவமானம்
நல்லவரெல்லாம் மாண்டுவிட்டால் வாழ்பவர்களுக்கு அருள் குறைந்து போகும்

வாழட்டும் சட்டம் வீழட்டும் நல்லவர் வாழ்வு மட்டும் .என்றில்லாமல் சோதனைகளை
நல்லமனிதர்கள் வாழ்த்தும் வழி காண என் வாழ்த்துக்கள் .

நான் பிறந்தது சம்பவம் என்றாலும் எனக்கு பின்னர் நன்மை வாழ்ந்திருக்கு என்று வருங்கால
மக்கள் திரும்பிப் பார்ப்பார்கள் .வணக்கம்

எழுதியவர் : சி.எம்.ஜேசு (19-Nov-15, 8:13 pm)
பார்வை : 163

மேலே