கொஞ்சம் காபி கொஞ்சும் காதல்

மித்ரா இன்னும் எவ்ளோ நேரம்தான் தூங்குவ என்று சத்தமிட்டுக்கொண்டு அலமாரியில் பைல்களை தேடிக்கொண்டிருந்தான் ரியான்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரியானுக்கு வேலை இருக்காது என்று நினைத்து அலாரம் வைக்காமல் தூங்கிவிட்டாள் மித்ரா.

ஒரு வழியாக ஃபைலை கண்டுபிடித்துவிட்டு ஏதோ திருவிழாவில் காணாமல் போன குழந்தையை மீட்டதுபோல் ஒரு உணர்வு ரியானுக்கு. ஹே மித்ரா எந்திரிச்சு தொல டி எரும மற்றும் தன் மாமனாரின் வளர்ப்பு பற்றி சில பல கவிதைகளை வாசித்தவாரு சமையலறையில் காபி தூள் தேடுக்கொண்டிருந்தான்.

டேய் லூசு, உனக்கு ஒலுங்கா சுடுதண்ணிகூட போட தெரியாது, இதுல காபி போட்டு என்ன கொல பன்ன பாக்குறியா என்பது போல் பயந்து உருண்டு விழுந்தது காபி டப்பா.

ஒ மை காட்.. ஆபிஸ்கு நேரம் ஆகிடுச்சு, இதுல இந்த டப்பா வேர இப்டி விழுந்துருச்சே என்று செய்வதரியாது புலம்பினான். உடனே காபி பொடியில் சாரி என கிருக்கிவிட்டு அவசரமாக கிளம்பினான்.

தூக்கம் தெளிந்து சின்னதாய் ஒரு சோம்பல் முறித்துவிட்டு மொபைல்போனை எடுத்ததும் தன் கணவனின் மெசேஜ் வந்திருப்பதை பார்க்கிறாள்.
“மித்து, எனக்கு இன்னைக்கு ஆபிஸ் இருக்கு, நைட் சொல்ல மறந்துட்டேன். கிட்சென்ல காபி போட்டு வச்சிருக்கேன், மறக்காம குடிச்சிடு”

கணவனின் காபியை ருசிக்க விரைந்து செல்கிறாள் கிட்செனுக்கு. வெள்ளை நிற டைல்ஸ் என்பதால் காபி பொடியின் மேல் சாரி சற்று தூக்கலாக தெரிந்தது. கிருக்கு பயபுல்ல கிட்சென் கிளீன் பன்னுடினு சொல்ல தான் மெசேஜ் பன்னிருக்கு என்று சிரித்தவாரு ப்ரிட்ஜ் மேல் இருந்த தன் கணவன் போட்டோவைப் பார்த்து கண்ணடித்தாள். வாட்ஸ்ஆப்பில் அயம் வெயிட்டிங் என்று ஸ்டேட்டஸ் மாட்றிவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போகிறாள்.

நீரும் செம்புலச்சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம் என்ற வாலியின் வரியில் ஷ்ரேயா கோஷல் மற்றும் நரேஷ் அய்யர் பாடக் கேட்டவாரு தன் அலுவலகம் அடைந்தான்.

ஜாவா அப்டினா என்னனே தெரியாது பட் நா ஜாவா புரோகிராமர் என்று தன் பெருமையை நினைத்தவாரு கூகுலில் இருந்து சில பல புரோகிராம்களை எடுத்து கட் காப்பி பேஸ்ட் செய்து தன் பணியை செவ்வனே செய்து முடித்துவிட்டு வாட்ஸ்ஆப்பில் தன் நண்பர்களின் புகைப்படம் மற்றும் ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டிருந்தான். தன் தோழன் பிரசாந்த் ஒரு வாரமாக அயம் ஸ்லீப்பிங்க் என ஸ்டேட்டஸ் போட்டிருப்பதைப் பார்த்து ஆர் யு அலைவ்? என்று மெசேஜ் தட்டிவிட்டான்.

தன் தோழிகள் பிரியங்கா மற்றும் மைதிலியின் செல்பிக்களை பார்த்து இந்த பன்னியும் பல்லியும் இன்னும் சுனாமியுடன் தான் செல்பி எடுக்கவில்லை என நினைத்தவாறு அடுத்த ஸ்டேட்டஸ் பார்த்தான். உடனே தூக்கிவாரிப் போட்டது (மித்ராவின் அயம் வெயிட்டிங்). வீட்டிற்கு போனால் என்ன ஆகுமோ என்று பயந்தவாறு தன் மகனை அழைத்து வர மாமனார் வீட்டிற்கு சென்றான்.

மாப்ளே.. இப்போ தான் வர்ரிங்களா என்று கேட்டவாறு வீட்டினுள் நுழைந்த்தார் மித்ராவின் தந்தை. இருவரும் நலம் விசாரித்துவிட்டு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். 7 மணி ஆகிடுச்சு , லேட்டா போனா அந்த கழுதை கத்தும் என்று வாய் நழுவி வார்த்தைகளை விட்டுவிட்டு தன் மாமனாரின் முகத்தைப் பார்த்து சிரித்தவாறு தன் மகன் வினுவின் கன்னத்தைக் கடித்து முத்தமிட்டு அழைத்துச் செல்கிறான்.

காரில் சென்றுகொண்டிருக்கும்பொழுது வினு கேட்கிறான்..”ஏம்பா அம்மாவ கழுதைனு சொன்னிங்க”

தன் மகனின் முகத்தைப் பார்த்து சிரித்துவிட்டு காரை செலுத்துகிறான்..

சற்று நேரத்தில் வினு தூங்கிவிட்டதைக் கண்ட ரியான் தன் டேபில்(tab) சுவையான காபி எப்படி தயார் செய்வது என்பதை பார்த்துக்கொண்டே காரை ஓட்டுகிறான்..

வீட்டில் மித்ரா தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்த ரியான், உடனே கிட்செனுக்கு சென்று தான் யூடியூபில் பார்த்த காபியை தயார் செய்துவிட்டு வினுவிடம் அம்மாவை எழுப்பி வரச்சொல்கிறான்.

மேசை மீது இரண்டு கோப்பைகளில் காபி இருப்பதைக் கண்ட மித்ரா, கழுதையின் வேலையாகத்தான் இருக்குமென்று நினைத்தவாரு ஒரு கோப்பயை எடுத்து வினுவிற்கு கொடுத்துவிட்டு இன்னொரு கோப்பயை எடுத்து ருசிக்கும் பொழுது சமையல் அறையில் இருந்து ரியான் வெளியே வந்து தான் செய்த காபியுடன் தன் மனைவியின் இதழ்கள் கொஞ்சி விளையாடுவதைப் பார்த்து தன் கண்களால் காதலை சொல்கிறான்.

இருவரும் கண்களால் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த வினு, கழுதைங்களா என்று கத்தியவாரு ஓடினான். உடனே மித்ராவும் ரியானும் ஓடிச்சென்று வினுவின் கன்னத்தை கிள்ளி குட்டி கழுதையே வா தூங்க போகலாம் என்று மூவரும் உரங்க சென்றனர்.

எழுதியவர் : அருண்குமார் (20-Nov-15, 8:37 am)
சேர்த்தது : அருண்குமார்
பார்வை : 520

மேலே