காதல் என்பது இவ்வளவு தான்
இளமை கொலு இருக்கும்
இடம் பொருள் ஏவல்
கதைக்கும் காவியத்திற்கும்
காரண காரியம்
காதல் காமம்
இடைப்பட்ட தூரம்
தொடு தூரமா தொலை தூரமா
அதில் தான் வாழ்க்கையின்
ஆடு புலி ஆட்டம்..
என்னென்ன ஜாலம்
என்னென்ன வேடிக்கை
தினந்தின வாடிக்கை
அதில் தான் எத்தனை
மயக்கம், கலக்கம் ....
வனப்பின் வசீகரம்
கண்ணைப்பறிக்கும்
வயசில் துடிக்கும்
மனசுக்கு என்ன தோணும்?
அழகு ரசிக்கும்
வயசுக்கோளாறு
ஆபத்தை எப்படி
உணரும்?
தாகம் தீர்க்கும்
துளி நீர் போல
காமம் தீர்க்குமா
காதல் ?
செந்தீ மாட்டிய
இரும்புண்நீரினும்
மீட்டற்கரிதென
இருந்திடுமோ
காதல் ?
எப்படியாகினும்
காதல் சில நாள் வரை தான்
கனவு காவியம் ஞாபகம்
அதன் பின்
அது வாழ்க்கைப்பயணத்தின்
நுழைவு/அனுமதி/தகுதிச்சீட்டு.
('செக்' செய்தபின் சாதாரண காகிதம்...)