32,000க்கும் அதிகமான கோவில்களைக் கொண்ட தமிழ்நாடு

சைவ திருதமிழ்நாடு......

புராணங்களில் கூறப்பட்டிருக்கும் கோவில்களில் பெரும்பாலானவை இருக்கும் இடம் நம் தமிழ்நாடு

1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
2. 108 பழைமையான வைணவக்கோயில்களில் 96 வைணவக் கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் இருந்தது தமிழ்நாட்டில்.
4. வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் இருந்தது தமிழ்நாட்டில்.
5. சைவக்கோயில் என்றாலே குறிக்கும் சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்.
6. வைணவக்கோயில் என்றாலே குறிக்கும் திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.
7. பஞ்ச பூதங்கள் என்றழைக்கப்படும் 5 சக்திகளுக்கான கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
8. நவகிரகங்கள் ஒன்பது மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் 27 இவற்றிற்கு கோயில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்.
9. 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ( 96 தமிழ்நாட்டில்,) ஒன்று நேப்பாளிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை.

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (20-Nov-15, 9:32 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 147

சிறந்த கட்டுரைகள்

மேலே