இயற்கை வளம் காப்போம் கவிஞர் இரா இரவி

இயற்கை வளம் காப்போம் ! கவிஞர் இரா .இரவி !

இயற்கையை மனிதன் சிதைக்கச் சிதைக்க
இயற்கை மனிதைச் சிதைக்கும் உணர்க !

ஏரி குளம் கண்மாய் கால்வாய் ஆக்கிரமிப்பு
எங்கு செல்லும் மழை நீர் சிந்திப்பீர் !

குளம் புதிதாக வெட்டாவிட்டாலும்
குளத்தைத் தூர் வாரி புதுப்பிக்கலாமே !

ஏரி புதிதாக கட்டாவிட்டாலும்
ஏரியின் கரை உயர்த்தி இருக்கலாமே !

விளைநிலங்களை வீட்டடி மனையாக்கும்
விபரீத எண்ணங்களுக்கு முடிவு கட்டுக !

நீர் வழிகளின் ஆக்கிரமிப்பு உயிருக்கு உலை வைப்பு
நீர் இனியாவது உணர்ந்து நடந்தால் சிறப்பு !

பணத்தாசையால் இயற்கை அழித்தல் கேடு
பண்பாக நடந்து இயற்கை வளம் காப்போம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (20-Nov-15, 9:16 pm)
பார்வை : 3718

மேலே