கதை கவிதை காதல்

"இதோ வந்துடறேன் " என்றபடி மறைந்தாள்.....
"காத்திரு" என்றே பதிந்தது ....
மனதினுள்ளே "ஏனடி " என்றாலும் .....,
கண்கள் சரியென ஆமோதித்தேன் ......

கடந்த தென்றல் வினவியது ...
" ஏன் இந்த ஒற்றைக்கால் தவம் ?" என ....
"கிடைத்த வரத்திற்காக தவம் " என்றேன் ...
புரியவில்லை என புலம்பியது தென்றல் ....
புரியும்படி "என்னவளுக்காக " என்றேன் ...
என்ன ? அவளுகக்காகவா ? என்றபடி ...
இரண்டு பேர் வரிசையாக்கி... இரண்டாவதானது.....

தென்றலிடம் அவளைப்பற்றி
ஓரிரு வரிகள் பகிர்ந்தேன் ....
விக்கல் எடுத்ததோ ? என்னவோ ?
அலைபேசியில் குரல் காட்டி...
"ஐந்து நிமிசத்துல வந்துடறேன் " என்றாள்..

"ஐந்து நிமிடமாகுமாம்" என்றேன் தென்றலிடம்....
"எதர்க்காகவாம்" நக்கலாய் ஒலித்தது நிலவிடமிருந்து .....
தென்றலை தேடி வந்திருக்கும் போல ....
என்னவள் இங்கே திரும்புவதர்க்காகதான் என்றேன் ,,,,,
ஒய்யாரமாய் அமர்ந்து சிரித்தது ... மூன்றாவதாய் ....

தென்றல் பார்த்து புருவமுயர்த்தியது .......
நிலவின் பதில் ...
" தெரியவில்லை ....
ஏனோ ? அவளுக்காக ?.......

வரிசை நீளும்முன் வந்துவிடடி....
என எண்ணும் வேளையில் ......
அவளின் வெண்ணிற மேலாடை ....
கண்ணில் பட்டது ....
அவளுக்கு மட்டுமே உரித்தான
கெஞ்சல் சிரிப்புடன் அவள் .......

நானும் சிரித்தேன் ....

கதை ...
கவிதை ....
காதல் ....
எல்லாம் அவளுக்காக என ..............

-சரண் ரா ..............

எழுதியவர் : நிவிசரண் (21-Nov-15, 5:31 pm)
பார்வை : 159

மேலே