அவள் முகமும் மெய்சிலிர்கும்

எனக்கு மிகவும் பிடித்த தோழியவள்
இப்பூவுலகில் என் தாய் - அவளைக்
விட சிறந்தவர் எவரும் இல்லை...!
மண்ணில் பிறந்திடும் தருணம் முதல்
மண்ணில் மறைந்திடும் தருணம் வரை
என்னை மட்டுமே எண்ணிய உள்ளம்
அவள் உள்ளமே - அவளுக்கு பெரிதாக
நான் ஒன்றும் செய்யவில்லை - நாளும்
அவள் மகிழ்ந்திட என்ன செய்ய வேண்டும்
என்று படைத்த கடவுளிடம் கேட்டேன்..
மென்மையாக கடவுள் "அம்மா " என
நாளும் - நீ அழைத்திடு அவள் முகமும்
புன்னைகையில் மெய்சிலிர்க்கும் என்றார் ...!

எழுதியவர் : வானவில்.க்வ்ஸ் (22-Nov-15, 2:52 am)
பார்வை : 189

மேலே