அன்னையே
சுமையாக உன்னை நினைத்து இருந்தால்
உலகில் கொஞ்சி
விளையாட மாட்டாய்
பசித்த போதும்
ருசித்து உணவு ஊட்டுவால்
அவளின் பசியை மறைத்து
புதை குழிகண்டு
புனிதமாய் பேசியும்
என் அன்னையை
கண்டு வருடுகின்றாய்
இன்று
கண்ணிமைகளை மூடி
மெல்லிசையால் பேசி
துள்ளிசையால் ஓராட்டும் அழகு
அதுவே என் அன்னையின் பாசம்
பாசத்தை நிறைந்து
வேசமாய் பாரக்காமல்
அன்பாய் அழைப்பாள்
அன்னையின் மடியில்
தூங்க
துன்பங்களை மறைந்து
இன்பங்களால் என்னை
வளரந்தவள் என் அன்னை.....!!!!!
கவிஞர் அஜ்மல்கான்
- பசறிச்சேணை பொத்துவில் -